Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” இளம்பெண் தற்கொலை வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வைரபுரம் பகுதியில் கொத்தனாரான அசோக்(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அசோக் தனது தந்தை மதுரை, சித்தி பார்வதி, 17 வயதுடைய தங்கை ஆகியோருடன் இணைந்து கூடுதல் வரதட்சணை கேட்டு ஷர்மிளாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சல் ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |