Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை”…. ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை…. அதிரடி தீர்ப்பளித்த சென்னை மகளிர் கோர்ட்டு….!!!!

வரதட்சணை கொடுமை செய்த ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் லக்ஷ்மி பிரசன்னா என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். முன்னதாக குமாரசுவாமிக்கு திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம், ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. இவ்வளவும் வரதட்சணையாக கொடுத்த போதும் லட்சுமி பிரசன்னாவை குமாரசாமி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் அவர் தனது மனைவியை வீட்டில் பூட்டி வைத்தும் சித்திரவதை செய்துள்ளார்.

இதனால் லட்சுமி பிரசன்னா மணமடைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிந்து குமாரசாமியை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையானது சென்னையில் உள்ள மகளிர் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்துள்ளது. மேலும் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் ஆர்த்தி பாஸ்கரன் என்பவர் ஆஜராகி வாதாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குமாரசாமியின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 15,000 ரொக்க பணம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |