Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை… கல்யாண நாளன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு… இளம்பெண் செய்த காரியம்…!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தினத்தன்று கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 28 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். திருமணமான பிறகு வரதட்சணை கேட்டு கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அப்போது கணவனை அந்த பெண்ணை தன்னை பார்க்க வரும்படி வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மனைவியிடம் கணவன் தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் திருமண தினத்தன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முன்பாக அந்த பெண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது மரணத்திற்கு காரணம் தனது கணவரும் மாமியாரும் என்று எழுதியுள்ளார். அவர்கள் தொடர்ந்து வரதட்சணை வாங்கி வரும்படி என்னை கொடுமை செய்ததால் இந்த முடிவை எடுத்ததாக அதில் எழுதியிருந்தார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |