பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரில் இஸ்மத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சபியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. மேலும் இஸ்மத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சபியா வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று சபியா மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் வரதட்சணை கொடுமை ஏதும் நடந்துள்ளதா ? என்று பெரம்பலூர் உதவி ஆட்சியர் பத்மஜா மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.