Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை…. புதுப்பெண் அளித்த புகார்…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆதிப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகேயனுக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு அழைத்து செல்கிறேன் என கார்த்திகேயன் பிரியதர்ஷினியிடம் கூறியுள்ளார்.

ஆனால் விசா கிடைக்கவில்லை என கூறி அவர் மட்டும் சென்று விட்டார். இதனையடுத்து பிரியதர்ஷினி தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கார்த்திகேயன், மாமியார் பாக்கியலட்சுமி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |