பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 35 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வாங்கி கொண்டு சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யாவிடம் 15 நகை வேண்டும் எனக்கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சதீஷ்குமார், அவரது தந்தை செல்வராஜ், தாய் தமிழ்ச்செல்வி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.