மயிலாடுதுறை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் பகுதியில் பார்த்திபன் மற்றும் செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் குழந்தையும், தாயும் உயிரிழந்து கிடந்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலஷ்மி 30 சவரன் நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
அதற்கு அவரது கணவரும் துணை போயுள்ளார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் கண்ணை மாமியார் மற்றும் கணவர் துன்புறுத்தியதால் மனமுடைந்த செல்வகுமாரி, தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி ஆர்டிஓ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மன உளைச்சலில் பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.