Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை தராத மனைவி…. பலாத்காரம் செய்த உறவினர்கள்…. வீடியோவை யூ-டியூபில் போட்ட கணவர்….!!!!

வரதட்சணை தரவில்லை என்பதற்காக உறவினர்களை பயன்படுத்தி மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை யூட்யூபில் கணவர் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் ஆபாச வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற தனது மனைவி 1.5 இலட்சம் வரதட்சணை தரவில்லை என்பதற்காகவும் இதை சாதகமாக்கி கொள்வதற்காக தனது மனைவியின் ஆபாச வீடியோவை யூடியூபில் பகிர்ந்த தாகவும் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கணவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணை கணவரின் தாய் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். உறவினர்களால் நான் சித்திரவதை செய்யப்பட்டேன் என்றும் அந்த காட்சிகள் நகல் எடுக்கப்பட்டு யூட்யூபில் பகிரப்பட்டன என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகளில் ஒருவர் ஐந்து நாட்களுக்கு முன்பு என்னை வளைவுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார். நான் அலறிக்கொண்டு என் வீட்டிற்கு ஓடி வந்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அன்றிலிருந்து இன்றுவரை வரதட்சணை கேட்டு அந்த குடும்பம் கொடுமை படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற போதும் கணவர் வற்புறுத்தி அழைத்து வந்து உறவினர்கள் இருவரை வீட்டுக்கு வரவழைத்து மனைவியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த காட்சிகள் மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |