Categories
மாநில செய்திகள்

வரப்போகிறது குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் !! அமைச்சர் சொன்ன தகவல் !!

திமுக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  இல்லத்தரசிகளுக்கு  1000 ரூபாய் தருவது உறுதி தான். ஆனால் எப்போது கொடுப்போம் என்று முதல்வர் முக. ஸ்டாலின் சரியான நேரத்தில் அறிவிப்பார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கட்டாயம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று அமைச்சர்கள் சக்கரபாணி கூறி இருந்தார்.

இதையடுத்து அமைச்சர் தா.மோ அன்பரசன், இன்னும் ஓரிரு மாதத்தில் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் கட்டாயம் வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் பொதுமக்கள் எப்பொழுது 1,000 ரூபாய் தருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். பொங்கல் சிறப்பு பரிசு 2,000 ரூபாய் ரத்து செய்துள்ள நிலையில் 1,000 ரூபாயாவது கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் திமுகவிற்கு ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன.

மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு பெற்றார்கள். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் தேர்தல் வரவிருக்கிறது இப்போதும் அதை வைத்து ஓட்டு கேட்பார்கள் என்று எண்ணி பொங்கல் சிறப்பு பரிசாக 1,000 ரூபாய் இல்லத்தரசிகளுக்கு கொடுத்துவிடலாம், இதற்கான திட்டத்தையும் அறிவித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |