நாட்டில் புகை பிடிப்பதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிப்பதை குறைக்கும் நோக்கில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கின்ற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து உள்ளது.
சிகரெட் பாக்கெட்டாக இல்லாமல் தனியாக சில்லறைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களுக்கு அபராதத்தை 200 இல் இருந்து 2000 ரூபாயாக அதிகரிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வயது குறைந்த நபர்களுக்கு சிகரெட் விற்பனை செய்பவர்களுக்கான தண்டனையை இரண்டு ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டாக அதிகரிக்கவும், அபராதத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரைவு மசோதா இறுதி செய்யப்படும் நிலையில் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய செய்து நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.