கர்நாடக மாநிலத்தில் தினசரி மின் தேவை நாளொன்றுக்கு 7,193 மெகவாட்டாக உள்ளது. ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் அனைத்து ஆதாரங்கள் மூலம் மொத்தம் 4,136 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் அனல் மின் நிலையத்தில் மொத்தம் 8 மின் உற்பத்தி அலகுகள் மூலம் 1,720 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 அலகுகளில் தான் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நான்கு அலகுகளின் மூலம் 630 மெகாவாட் தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் பெங்களூருவுக்கு மட்டும் தினமும் 103 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.கோடை காலம் தொடங்க உள்ளதால், வரும் காலங்களில் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அணைகளிலும் நீர்மட்டம் குறைவதால் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்படும் இதனால் மேலும் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் தொடர்ந்து மின் உற்பத்தி குறைந்தால் கர்நாடக மாநிலம் மின்வெட்டுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படலாம் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.