Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வரப்போகும் தேர்தலில்….” பாஜக அமோக வெற்றி பெறும்”… நடிகை கௌதமி அறிவிப்பு..!!

வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு அமோக வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நடிகை கௌதமி கூறியுள்ளார் .

கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை கௌதமி பங்கேற்று பேரணியை தொடங்கினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது:-

தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பொன்னான எதிர்காலம் அமைவதற்கான முதற்படியாக கருதுகிறேன். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு அமோக வெற்றி கிட்டும். கட்சி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை பற்றி , சில நாட்கள் எடுத்துக் கொண்டாலும் விரைவில் அதுபற்றிய முடிவுகள் வெளியிடப்படும், என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறினார்.

Categories

Tech |