மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விபூதி, இளநீர், குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Categories