ஜேர்மனியில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
ஜெர்மன் நாட்டின் அரசாங்க தரவுகளின்படி இளைஞர்களின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய பதிவுகள் 15 முதல் 24 வயதுடைய ஜேர்மன் மக்கள்தொகை விகிதமானது 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் மிகக் குறைந்த புள்ளியை எட்டியுள்ளது என்று ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜெர்மனில் ஒட்டுமொத்தமாக மக்கள்தொகையில் வளர்ச்சியடைந்தாலும் 2021-ஆம் ஆண்டின் இறுதியில் முதல் முறையாக 83.2 மில்லியனைத் தாண்டியிருந்தாலும், அவர்களில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் வெறும் 10 % பேர் தான் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிகின்றது.
இதனை தொடர்ந்து ஜேர்மனியின் பெடரல் புள்ளியியல் அலுவலகமான Destatis-ன் கூறியதாவது, ஜேர்மனியில் இளைஞர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் 2005-ஆம் ஆண்டிலிருந்து குறைந்து காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டை விடவும், 2021-ல் மிகவும் குறைந்த புள்ளியை எட்டியுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு இறுதியில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் முழுமையான எண்ணிக்கை 8.3 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இந்நிலையின் அரசாங்க புள்ளிவிபரங்களின்படி ஜேர்மனியின் இளைஞர்களின் சதவீதம் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியாவுடன் ஒப்பிடத்தக்கது. ஆனால் மக்கள்தொகையில் 12.6 சதவீத இளைஞர்கள் இருக்கும் அயர்லாந்தை விட மிகவும் குறைவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரியாக 10.6 சதவீதமாக உள்ளது. ஜேர்மனியின் Bremen நகரத்தில் உள்ள மக்கள்தொகையில் 11 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அதே சமயத்தில் கிழக்கு மாநிலங்களான பிராண்டன்பர்க்கில் 8 %, சாக்சோனி-அன்ஹால்ட்டில் 8.3 % மற்றும் மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியாவில் 8.3 % பேர் என கணிசமாக சிறிய சதவீதத்தைக் கொண்டுள்ள நகரங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.