உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்துள்ளதால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
உக்ரைன் -ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதலில் உக்ரைன் மக்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தப் போரின் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ளது.
உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததன் காரணமாக நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக நாட்டில் கோதுமை விலை 5.81% அதிகரித்துள்ளது. சென்னையில் கோதுமை சில்லரை விலை ரூபாய் 34 ஆகும். மும்பையில் ரூபாய் 49 ஆகவும், கொல்கத்தாவில் 29 ரூபாய்க்கும், டெல்லியில் 27 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. கோதுமையின் விலை அதிகரித்துள்ளதால் இனி பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.