உள்ளூர்சந்தையில் தங்கத்தின் விலையானது முதல் தடவையாக 1,50,000 ரூபாயை தாண்டி இருப்பதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்றைய நாள் 24 கேரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.1,15,000 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 1,39,000 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
இலங்கை சந்தையில் தங்கத்தினுடைய அளவானது வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையில் உலகச்சந்தையில் தங்கத்தின் விலையானது 1980.21 அமெரிக்க டாலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1974.71 அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கத்தின் விலையானது இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.