ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்த உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் ஆபரண தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றது. மேலும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருப்பதால் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 94 ரூபாய் அதிகரித்து 4, 166 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 752 ரூபாய் அதிகரித்து 33,328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 52.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.