அமெரிக்காவில் இதுவரை காணாத அளவில் வீசி வரும் பனிப் புயலால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இதுவரை காணாத அளவில் பனிப் புயல் பொழிந்து வருவதால் அவசர நிலை பிரகடனம் போடப்பட்டுள்ளது.மேலும் அங்கு 1,400 விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது பணிகள் கொட்டி கிடைப்பதால் அதனை அகற்றுவதற்கான முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நிலப்பரப்பில் இருந்து 2 அடி உயரத்திற்கு பனி கொட்டி கிடைப்பதால் வாகனங்கள் செல்வதற்கு கடினமாக உள்ளது.அங்கு பனி அதிகம் பொழிவதால் மின்சார தயாரிப்பு தடைபட்டுள்ளது. இதனால் ஏழு கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.