நியூயார்க்கின் அதிக பனிப்பொழிவினால் நகர ஆளுநர் மக்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் நகரின் ஆளுநரான கியூமோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த பனி புயலானது அசாதாரணமானது.
மேலும் இது பிற்பகலில் மிகவும் ஆபத்தானதாக மாறலாம். மேலும் மிக அபாயகரமான நிலையில் சாலைகள் இருக்கிறது. அதாவது சாலைகளில் பனி அதிகம் கொட்டியுள்ளதால் அதனை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே மக்கள் அனைவரும் சாலைகளில் பயணிக்கும் போது கவனமாக செல்ல வேண்டியது அவசியம். மிகமுக்கியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்.
லாங் ஐலேண்ட் ரயில்ரோடு மெட்ரோ வட பகுதிகளில் போக்குவரத்திற்கான சேவைகள் முடங்கி காணப்படுகிறது. மேலும் லாங் தீவு மற்றும் மிட்-ஹட்ஸன் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கிழக்கு லாங் தீவில் காற்றானது 60 மயில் வேகத்துடன் வீசலாம். இதே நேரத்தில் பல்வேறு இடங்களில் 40 மைல் வேகத்துடன் காற்று வீச நேரிடும். எனவே நியூயார்க்கில் இருக்கும் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.