பிரபல நாடு உலக நாடுகளுக்கு கஞ்சாவை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
இலங்கை நாட்டில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு இலங்கையின் முன்னாள் அதிபர் தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கை அரசு ஆங்கிலேயே ஆட்சிக்கு முன்பு கஞ்சா ஏற்றுமதி செய்வதை போல தற்போதும் கஞ்சாவை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் சிசிர ஐயக்கொடி கூறியதாவது.
கஞ்சாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தால் அதிகளவு வருமானம் கிடைக்கும். மேலும் அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும். இந்த நிலையில் உள்நாட்டு மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ மூலம் 3 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்ட முடியும். எனவே எங்கள் அரசு கஞ்சா மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. மேலும் உலக அளவில் தற்போது கஞ்சாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகின்றது. எனவே நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.