பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம், விக்ரம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லை. ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் நெற்றியில் நாமம் இடப்பட்டு உள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைத்து உள்ளார் என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இயக்குனர் மணிரத்னம் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.