இங்கிலாந்து நாட்டின் மகாராணி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை நடந்துள்ளது. இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இங்கிலாந்தின் புதிய பிரதமர் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வழக்கமாக பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று மகாராணியை சந்திப்பார்கள். ஆனால் இந்த முறை பால்மோரல் அரண்மனைக்குச் சென்று மகாராணியை அதிபர்கள் சந்திப்பார்கள் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வழக்கமாக மகாராணியை சந்தித்து அவருடைய கையில் முத்தமிடுவார்கள்.
அதேபோன்று மகாராணியும் அதிபர் கைகளில் முத்தமிடுவார். இது பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மகாராணியின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவர் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க சொல்லியுள்ளார். அதோடு மகாராணியார் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார். இதனால் அதிபர் பதவி ஏற்ப விழாவில் மகாராணி கலந்து கொள்ள முடியாது. எனவே அதிபராக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தற்போது மகாராணி இருக்கும் பால்மோரல் அரண்மனைக்கு சென்று மகாராணியை சந்திக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவை மகாராணியார் எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.