Categories
தேசிய செய்திகள்

வரலாற்றில் இதுவே முதல் முறை… ஸ்மார்ட் பட்ஜெட்… நாடே அசர போகுது…!!!

இந்தியாவில் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இதில் மத்திய நிதியமைசச்ர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் 8வது பட்ஜெட் இது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக காகிதமில்லாமல் ஸ்மார்ட் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் . நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இதன் மூலம் அரசுக்கு 140 கோடி மிச்சமாகும்.

நிதிநிலை அறிக்கையில் வருமான வரி குறித்த சலுகை இருக்குமா என அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். கொரோனா பொது முடக்கத்தான் நலிந்து போன சிறு மற்றும் குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் சலுகைகள் இருக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வதாக குடியரசுத் தலைவரிடம் முறைப்படி தெரியப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் உரை முடிவடைந்தவுடன் யூனியன் பட்ஜெட் என்ற செயலி மூலம் தகவல்கள் அனைத்தும் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |