இன்றைய நாள் : ஏப்ரல் 12
கிரிகோரியன் ஆண்டு : 102 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 103 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு : 263 நாட்கள் உள்ளன
இன்றைய தின நிகழ்வுகள்
240 – முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரது தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார்.
467 – அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1167 – சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார்.
1204 – நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர்.
1606 – ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
1633 – ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
1831 – இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிரஃப்டன் தொங்கு பாலத்தில் போர் வீரர்கள் அனிவகுத்து சென்றதில் பாலம் உடைந்தது.
1832 – இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க-அமெரிக்கப் படையினரும் கூட்டமைப்புப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டமைப்பு இராணுவத்திடம் வீழ்ந்தது.
1877 – ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் மாநிலத்தை தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தது.
1927 – சாங்காயில் சங் கை செக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனையை அறிவித்தார்.
1927 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ரொக்சுஸ்பிரிங்சு என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் நகரின் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. 72 பேர் உயிரிழந்தனர்.
1937 – சேர் பிராங்க் விட்டில் வானூர்தி ஒன்றை பறக்கவிடுவதற்கான முதலாவது தாரைப் பொறியை இங்கிலாந்து, ரக்பி நகரத்தில் சோதித்தார்.
1945 – அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் இறந்தார். துணைத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அரசுத்தலைவரானார்.
1955 – யோனாசு சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
1961 – பனிப்போர்: விண்வெளிப் போட்டி: சோவியத் விண்ணோடி யூரி ககாரின் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
1963 – சோவியத் அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பல் கே-33 பின்லாந்து சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதியது.
1970 – சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
1980 – பிரேசிலில் போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 58 பேரில் 55 பேர் உயிரிழந்தனர்.
1980 – லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.
1981 – முதலாவது விண்ணோடம் கொலம்பியா ஏவப்பட்டது.
1983 – பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
2002 – எருசலேம் சந்தை ஒன்றில் பெண் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 104 பேர் காயமடைந்தனர்.
2007 – இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
2009 – சிம்பாப்வே தனது டாலர் நாணயத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது.
2014 – சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் தீ பரவியதில் 16 பேர் உயிரிழந்தனர், 2,000 வீடுகள் அழிந்தன, 10,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
பிறப்புகள்
1484 – மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527)
1851 – வால்டேர் மவுண்டர், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1928)
1852 – லிண்டெமன், செருமானிய கணிதவியலாளர் (இ. 1939)
1854 – சே. ப. நரசிம்மலு நாயுடு, தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர் (இ. 1922)
1884 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1951)
1904 – அண்ணல் தங்கோ, திராவிட இயக்க எழுத்தாளர்
1932 – லக்சுமன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் அசியல்வாதி (இ. 2005)
1934 – என். எஸ். வி. சித்தன், தமிழக அரசியல்வாதி
1942 – யாக்கோபு சூமா, தென்னாப்பிரிக்காவின் 4வது அரசுத்தலைவர்
1943 – சுமித்ரா மகஜன், இந்திய அரசியல்வாதி
1947 – டாம் கிளான்சி, அமெரிக்க வரலாற்றாளர் (இ. 2013)
1954 – சப்தர் ஆசுமி, இந்திய மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், செயற்பாட்டாளர். (இ. 1989)
இறப்புகள்
352 – முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)
1817 – சார்லசு மெசியர், பிரெஞ்சு வானியலாளர் (பி. 1730)
1927 – ஜோசேபே முஸ்காதி, இத்தாலிய மருத்துவர், அறிவியல் ஆய்வாளர் (பி. 1880)
1937 – செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப், சோவியத் வானியலாளர் (பி. 1848)
1945 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (பி. 1882)
1946 – வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி. 1869)
1966 – வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1874)
1993 – நெ. து. சுந்தரவடிவேலு, தமிழக தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1911)
2005 – வைக்கம் சந்திரசேகரன் நாயர், மலையாள எழுத்தாளர் (பி. 1920)
2006 – ராஜ்குமார், கன்னட திரைப்பட நடிகர் (பி. 1929)
2008 – மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம், இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் (பொலிவியா)
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்