Categories
உலகசெய்திகள்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்… அதிபர் எடுத்த அதிரடி முடிவு…!!!!

துனிசியா நாட்டின் அதிபர் பொது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

துனிசியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொது மக்களின் எதிர்ப்பு மற்றும்  போராட்டங்களை தொடர்ந்து இந்த நாட்டின் பாராளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சாசனத்தை எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர்  கைஸ் சையத்  அதிகாரத்தை தானே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அதிலிருந்து நாட்டின் பொருளாதார நிலை மீதான கோபம், மக்களை தெருக்களில் இறங்கி போராட வைத்துள்ளது. மேலும் சில போராட்டங்களில் போராட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் எம்பிக்கள் காணொளி காட்சி வழியாக கூடி, நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தது உத்தரவை ரத்து செய்ய வாக்களித்துள்ளார். அதன்பின் அதிபர் கைஸ் சையத் அதிரடியாக நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது “நாடாளுமன்றம் அதன் சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டது. மேலும் அது நாட்டை காட்டிக் கொடுத்து விட்டது. அதற்கு காரணமான எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பற்றி அதிபர் கைஸ் சையத் டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பேசியுள்ளார். அப்போது இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். மேலும் நாட்டையும் நாட்டின் அமைப்புகளையும் காப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |