டாலருக்கு எதிராக இலங்கையின் ரூபாய் மதிப்பு இதுவரை வரலாறுகாணாத அளவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
வரலாற்றில் முன் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி கொண்டிருக்கிறது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல், கேஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.
மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதன் முறையாக ரூ.300ஐ கடந்திருக்கிறது. அந்தவகையில் இலங்கை வர்த்தக வங்கிகளில் நேற்று டாலரின் மதிப்பு ரூ.310 ஆக இருக்கிறது. இது பொருளாதார வல்லுனர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.