Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க சரித்திர செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் போன்றவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான தொன்மையான ஆவணங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

மேலும் இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. மேலும் கால மாற்றத்தின் காரணத்தினாலும் மனிதனின் அஜாக்கிரதையாலும் இதன் முக்கியத்துவம் கெடாமலும், குறையாமலும் மின்னணு முறையில் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் ஏதேனும் தங்கள் வசம் இருந்தால் சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து மேற்கண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை பாதுகாக்கவும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த உதவிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |