இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ் இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படம் கேப்டன் மில்லர் சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் குறித்த வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் வரலாற்று பாணியில் இந்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.