Categories
மாநில செய்திகள்

வரவிருக்கும் நாட்கள் மோசமாக இருக்கும்…. அரசாங்கம் மனிதாபிமானம் காட்டவில்லை…!!!

நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா  பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இயக்குநர் கரு.பழனியப்பன், “நம்மிடம் உள்ள ஒவ்வொரு ரூபாயையும் சேமிப்போம். அதை தேவைப்படுபவர்களுக்கு கொடுப்போம். வரவிருக்கும் நாட்கள் நாம் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும். நலிந்தவர்களை நோக்கி அரசாங்கம் மனிதாபிமானம் காட்டவில்லை. நாம் மக்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும். எதிர்காலத்தில் கோவில்கள் அல்ல மருத்துவமனைகளை அரசு கட்டும் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |