விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும், அதனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நான்கு நபர்களும், நடிகர் மற்றும் நடிகைகளில் 7 நபர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதன்படி சுனிதா, அஷ்வின், தர்சாகுப்தா, பவித்ரலட்சுமி, சித்தார்த், ராதா, ராதா ரவி, லட்சுமி மேனன், சோனா, லட்சுமி ராமகிருஷ்ணன், பூனம் பஜ்வா போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது