Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரவு செலவில் வந்த சண்டை…. பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறு காரணமாக பெண் போலீசின் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபுரம் குரங்குமாயன் தெருவில் அதிவீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு மேனகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந் நிலையில் மேனகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வரவு-செலவு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த அதிவீரன் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அதிவீரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |