Categories
மாநில செய்திகள்

“வரான் வரான் மாண்டஸ்” மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகரும் புயல்….. மக்களே அலர்ட்டா இருங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 560 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 9ஆம் தேதி நள்ளிரவு புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |