உருமாறிய கொரோனா வைரஸ்களின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் அனைத்து கொரோனாவிற்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவுடன் கடுமையாக போராடி ஒரு வழியாக ஒரு சில நிறுவனங்கள் கொரோனவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தீர்வு கிடைத்து விட்டது என்று மனநிலையில் ஆய்வாளர்கள் இருந்தபோது புது புது வைரஸ்களும் உருவாகி பீதியை கிளப்பி வருகின்றன. கடந்த வருட இறுதியில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் புது வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இவ்வாறு பரவ தொடங்கிய இந்த கொரோனாவிற்கு சில தடுப்பூசிகள் பயன்படவில்லை. மறுபுறம் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணிகள் செய்யப்பட்டு வந்தாலும் இன்னும் கொரோனாவின் தாக்கம் தணியவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்து மக்களுக்கு தடுப்பூசி வந்தாலும், திடீரென புது வகை கொரோனா வந்து வேகமாக பரவுவது வருத்தமளிப்பதாக பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உருமாறிய கொரோனா வைரஸ்களையும் சமாளிக்கும் அளவிற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கையாக இருக்கிறது. இந்த கோரிக்கைக்கு ஏற்ப பல்வேறு தடுப்பு நிறுவனங்கள் தடுப்பூசியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.