சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸுக்கு தமிழகம் முழுவதும் 15 திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்களின் மீது வரி ஏய்ப்பு புகார் முன்வைக்கப்பட்டதால் நூற்றுக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா ஸ்டோர் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராஜநகர், புரசைவாக்கம்,பாடி, குரோம்பேட்டை மற்றும் போரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்சின் கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரிலும் இந்நிறுவனத்தின் மிகப் பெரிய கடைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு நகைக் கடைகள் மற்றும் பர்னிச்சர்கள் உட்பட அனைத்து ரகமான பொருட்களும் கிடைக்கின்றன.
இதனை தொடர்ந்து சாட்டப்பட்ட வரி ஏய்ப்பு புகார் காரணமாக இன்று காலை 8 மணி முதல் சூப்பர் சரவணா ஸ்டோர்சின் அனைத்து கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னையை பொருத்தவரையில புரசைவாக்கத்தில் உள்ள மூன்று அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குரோம்பேட்டை மற்றும் போரூரில் உள்ள சரவணா ஸ்டோர் கிளைகளிலும் மற்றும் அதன் குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை யாரும் கடைகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் சோதனையின் முடிவில் எவ்வளவு வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் தெரிய வரும்.