Categories
மாநில செய்திகள்

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து… லலிதா ஜுவல்லரியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில்… ஐடி ரெய்டு..!!

தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடைகளில் வருமான வரி அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லலிதா ஜூவல்லரி ஜுவல்லரி மிகவும் பிரபலமான நகை  கடை . பல மாவட்டங்களில் இதன் கிளைகள் உள்ளது. அதில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை தி நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் சற்றுமுன் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

லலிதா ஜுவல்லரி உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் மதுரையில் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |