சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு, வரி பாக்கி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைவரும் தெரிவிக்கும்படி வைக்க வேண்டும். சொத்துவரி மதிப்பீடு, வரி வசூலில் மெத்தனப் போக்கு மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குகின்றன இது மிகுந்த வேதனை அளிக்கிறது. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது. சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றி அவர்களின் விபரங்களை வெளியிட உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.