ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது .
இந்நிலையில் கார்த்திக் சிதம்பரம், நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களுடைய உரிமை. இப்படி இருக்கையில் நடிகன்என்று பார்ப்பது தவறு என்று தெரிவித்துள்ளார்.