Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” வரி செலுத்தவில்லை ” சுதந்திரமாக சுற்றித்திரிந்த வாகனங்கள்…. அதிரடி கட்டிய அதிகாரிகள்…!!

வட்டார வாகனத்துறை அதிகாரிகள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்துவரும்  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கொரோனா  பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை வரி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை நிறைய வாகனங்கள் வரி செலுத்தாமல் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அந்த  தகவலின்படி வட்டார போக்குவரத்து துறை அதிகாரி முருகானந்தம் தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் உடுமலை சாலை, பாலக்காடு சாலை, கோவை சாலை போன்ற பல முக்கிய சாலைகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது வரி செலுத்தாத  வாகனங்களை அதிகாரிகள்   பறிமுதல் செய்துவருகின்றனர். இதுவரை  23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு  3,22,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 2,50,000 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்தாத வாகன ஓட்டிகள் கூடிய விரைவில் வரி செலுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் உங்களது உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |