Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வரி செலுத்தாத கடைகள்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்….!!!

வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மினி பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கரூர் பேருந்து நிலையத்தில் 8 கடைகள், மினி பேருந்து நிலையம் அருகே 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை என மொத்தம் 11 கடைக்காரர்கள் தலா 7 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை வரி பாக்கி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை செலுத்தவில்லை. எனவே மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி 11 கடைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது கடைக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |