அடல் பென்ஷன் திட்டத்தில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வருமான வரி செலுத்தும் ஒருவர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவராவார். அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணைந்த சந்தாதாரர், விண்ணப்பித்த தேதி அல்லது அதற்கு முன் வருமான வரி செலுத்துபவராக இருப்பது கண்டறியப்பட்டால், அடல் பென்ஷன் திட்ட கணக்கு மூடப்பட்டு, அந்த நாள் வரை திரட்டப்பட்ட ஓய்வூதியத் தொகை சந்தாதாரருக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியது.
பென்ஷன் திட்டம், அரசு உத்தரவாத திட்டமாக’ கருதப்படுகிறது. இது வரி விலக்கு பலன்களையும் வழங்குகிறது. திட்டத்தில் பங்களிப்பவர்கள் பிரிவுகள் 80 CCC மற்றும் 80CCD ஆகியவற்றின் கீழ் கூடுதல் வரிச் சலுகைகளைப் பெறலாம். அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், 18 வயது ஆன ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து, அடுத்த 42 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.210 டெபாசிட் செய்யத் தொடங்கினால், அவர் ரூ. 5,000 ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியுடையவராவார். இந்நிலையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.