தமிழகத்தில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் அவ்வப்போது மின் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன . இவ்வாறான பராமரிப்பு பணிகளின்போது அந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனை செயற்பொறியாளர்கள் அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள்.
அந்த வகையில் ஏப்ரல் 5ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால்
தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணி கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகளில் காலை ஏப்ரல் 5ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.