நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த மாதம் 27 ஆம் தேதி முதல் வாரம் மூன்று முறை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி முதல் திங்கள், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று நாட்கள் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும். மறுநாள் காலை 4.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
அதனைப் போலவே கன்னியாகுமரியிலிருந்து வருகின்ற 28 ஆம் தேதி முதல் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும். அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இந்த ரயில் செல்லக்கூடிய வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.