Categories
மாநில செய்திகள்

வருகின்ற 29ஆம் தேதி…. ”தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு” அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் …!!

பள்ளி திறப்பது குறித்து உறுதியான முடிவை முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடுதல் அதோடு புதிய 108 ஆம்புலன்சை துவக்கி வைத்தல் போன்ற விழாக்களில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பள்ளி திறப்பது பற்றிய அறிவிப்பில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. இம்மாதம் 29ஆம் தேதி முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்க இருக்கிறேன்.

அதன்பிறகு வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை போன்றவர்களிடம் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி திறப்பது பற்றிய உறுதியான முடிவை அறிவிப்பார். மாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகங்கள் இருந்தால் அதனை தீர்ப்பதற்கு மட்டும் பள்ளிக்கு வரலாம். உரிய ஆலோசனைகள் முடிவடைந்த பிறகு தமிழக முதல்வர் தனது இறுதி முடிவை அறிவிப்பார்” என கூறியுள்ளார்.

Categories

Tech |