Categories
தேசிய செய்திகள்

வருகிறது இன்சூரன்ஸிற்கு ஒரு UPI மாடல்….. இதோ வெளியான சூப்பர் தகவல்……!!!!!

காப்பீட்டு ஒழுங்கு முறை நிறுவனமான IRDAI ஆனது, காப்பீட்டுத்துறையில் ஒரு கேம் சேஞ்சராக செயல்படும். அத்துடன் பாலிசிகள் விற்பனை, புதுப்பித்தல் மற்றும் உரிமை கோரல்களைத் தீர்ப்பது உள்பட பல்வேறு சேவைகளுக்கு ஒரே இடத்தில் செயல்படும். இந்த தொழில்நுட்பம் தலைமையிலான போர்டல் நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதிசெய்வதன் வாயிலாக நாட்டில் காப்பீட்டு ஊடுருவலை விரிவுபடுத்த உதவும்.

காப்பீடு சம்பந்தமான அத்தனை சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு Bima Sugam வலைத்தளம் தயாராகி வருகிறது. இந்தியாவில் பணப் பரிவர்த்தனைகளுக்கு யூபிஐ புது பாய்ச்சலை  தந்ததுபோல, காப்பீட்டுதுறைக்கு இந்த வலைத்தளம் இருக்கும் என IRDA தலைவர் பண்டா தெரிவித்துள்ளார். காப்பீடு பெறுதல், விற்பது, பிரீமியம் செலுத்துதல், செட்டில்மென்ட் கோருதல் என அனைத்திற்குமான ஒன் ஸ்டாப் தீர்வாக Bima Sugam இருக்கும்.

Categories

Tech |