ட்விட்டரில் பதிவிடும் ட்விட்டை எடிட் செய்யும் வசதியை விரைவில் ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
உலகளவில் நம்பகத்தன்மை பெற்ற சமூக வலைதளங்களில் முன்னணி வகித்து வருவது ட்விட்டர் நிறுவனம். வெறும் 280 வார்த்தைகளில் சொல்ல வந்ததை சொல்லி விட்டு செல்லுங்கள் என்று பல கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் விதித்திருந்தாலும், இதன் மீது ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முயற்சியில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது .சமீபத்தில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் ஸ்பீசஸ் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து இந்நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது ட்விட்டர் இரண்டு கணக்குகள் இணைந்து ட்வீட் பதிவிடும் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பயனர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் Edit Button விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்று தகவல் கசிந்துள்ளது. இதுவரை ட்விட்டரில் உள்ளிட்ட பதிவை நீக்க மட்டுமே முடியும் தவிர, அதனை திருத்த முடியாது. ஏப்ரல் 1ஆம் தேதி இது தொடர்பான ஒரு மறைமுக அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஓராண்டாக இதற்கான பணி நடைபெற்று வருவதாக கூறிய ட்விட்டர் வரும் மாதங்களில் இந்த வசதியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.