தமிழகத்தில் பாஜக துணையின்றி சட்டத்தேர்தலில் எவரும் ஆட்சி அமைக்க இயலாது என பாஜக தேசியசெயலாளர் ஹெச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர் கோட்டையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முழுவதும் பாஜக வளர்ந்துகொண்டே வருகிறது. மொழிக் கொள்கையின் மூலம் பிரச்சினையை ஏற்படுத்தி சிலர் அதனை தடுக்க நினைக்கின்றனர். இதனால் நாட்டின் ஒற்றுமை பிளவுபடும். எனவே அதை தடுக்க நினைப்போரை மக்கள் புறக்கணிக்குமாறு அவர் கூறியுள்ளார். எந்த கூட்டணி அமைந்தாலும் பாஜக இல்லாமல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலில் அடுத்து எவரும் ஆட்சி அமைக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்”.
மேலும் மத்திய அரசானது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் கிசான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் நேரடியான பலனை பெரும் நிலையில் முறைகேடு நடந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இவ்வித முறைகேட்டில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவது மிகுந்த அவசியமாகிறது. பாஜகவின் இலக்கு தேசியம் ஒன்றாகும். இருமொழிக் கொள்கை வேண்டுமென நினைப்பவர்கள் தங்களது குழந்தைகளை சிபிஎஸ்சி போர்டு பள்ளிகளிலிருந்து நிறுத்தி அவர்களை சமச்சீர் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கட்டும் இல்லையெனில் அனைவரும் புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது மிகவும் அவசியமாகிறது என்றும் கூறியுள்ளார்.