சன் தொலைக்காட்சியில் வருகிற ஆங்கில புத்தாண்டில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஒரு திரைப்படம் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் பண்டிகை காலங்களில் புதிய படங்களை ஒளிபரப்பி மக்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறது. இந்நிலையில் சன் தொலைக்காட்சி வருகிற புத்தாண்டில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஒரு திரைப்படத்தை டப் செய்து ஒளிபரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அஞ்ஞாதவாசி’ திரைப்படத்தை தமிழில் டப் செய்து ஒளிபரப்பவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அனு இம்மானுவேல், குஷ்பூ, போமன் இரானி ,ஆதி ஆகியோர் நடித்திருந்தனர் . இதேபோல் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் வைகுண்டபுரம் என்ற தலைப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக புது படங்கள் அதிக அளவு ரிலீஸாகாத காரணத்தால் சன் தொலைக்காட்சி இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளதாக தெரிகிறது.