Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வருகிற 1- ஆம் தேதி…. மாவட்டம் முழுவதும் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை முன்னிட்டு வருகிற 1- ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக வருகிற 12-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பணியில் தேவையான பணியாளர்கள் ஈடுபடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |