Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருகிற 11ம் தேதி முதல்…. மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை  மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலில், வரும் நவம்பர் 11ம் தேதி சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. நவம்பர் மாத பாதியிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரம், வீரகனூர் மற்றும் செங்கோட்டையில் தலா 4 செ.மீ மழையும், கூடலூரில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர் மாதம் தொடங்கி இன்று வரை மழையின் அளவு இயல்பைவிட 44 சதவீதம் குறைவாக பதிவாகி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |