இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுவை காரணமாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதன்படி பெட்ரோல் ரூ.5 மற்றும் டீசல் ரூ.10 என்று கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதுமட்டுமில்லாமல் பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைத்தது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை எதிர்பார்த்ததை விட குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.